நண்பர்களே, இக்குழுமத்தைச் சேர்ந்த பூமாலைராஜின் பங்களிப்பில் வெளியாகும் முதல் குனு இணைய தள தமிழாக்கப் பக்கம். கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்கள் அனைவரும் அறிய வேண்டிய ஒன்று.
இப்பக்கதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி, இரண்டு உறுபுகளை ஒவ்வொரு மூலக் கோப்புடனும் சேர்க்க வேண்டும்: ஒன்று பதிப்புரிம அறிக்கை (உதாரணத்துக்கு “Copyright 1999 டெரி ஜோன்ஸ்”), மற்றொன்று அந்த நிரல் குனு பொதுமக்கள் உரிமத்தின் (அல்லது குறைக்கப்பட்ட GPL) கீழ் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கும் படியெடுப்பதற்கான அனுமதிச் சான்று. தாங்கள் வெளியீட்டை தயாரித்து முடித்த ஆண்டு காப்புரிமை அறிவிப்பில் சேர்க்கப் பட்டிருக்க வேண்டும். (அதாவது தாங்கள் 1998 ஆம் ஆண்டு முடித்திருந்து, 1999 வரையில் வெளியிடவில்லையெனில், 1998 ஆம் ஆண்டைப் பயன்படுத்தவும்). ஒவ்வொரு வெளியீட்டுக்கும் முறையான ஆண்டு சேர்க்கப் பட்டிருக்க வேண்டும்; உதாரணத்திற்கு சில பதிப்புருக்கள் 1998 ஆம் ஆண்டிலும் சில 1999 ஆம் ஆண்டிலும் முடிக்கப் பட்டிருந்தால், “Copyright 1998, 1999 டெரி ஜோன்ஸ்” என பயன்படுத்தவும். பலர் நிரல் எழுத உதவியிருந்தால், அனைவரது பெயர்களையும் பயன்படுத்தவும். பல ஆண்டுகளில் பல வெளியீடுகள் கொண்ட மென்பொருட்களுக்கு, இடைவெளித் தொடரையோ பெயர்ச்சுருக்கங்களையோ பயன்படுத்தாமல், மேற்கண்ட உதாரணத்தைப் போல ஒவ்வொரு ஆண்டையும் முழுமையாக் குறிப்பிடவும். எப்பொழுதும் “Copyright”; என்ற ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தவும். சர்வதேச வழக்கப்படி ஏனைய மொழிகளிலான உருவாக்கத்திலும் இது உலகெங்கிலும் பயன்படுத்தப் படுகிறது. “©” என்ற copyright குறியீட்டை நீங்கள் விரும்பினால் (மற்றும் உங்கள் எழுத்து அமைப்பு ஆதரித்தால்) பயன்படுத்தலாம். ஆனால் அது கட்டாயமல்ல. “(C)”, என்கிற மூன்றெழுத்துக் கிரமத்துக்கு சட்டரீதியான முக்கியத்துவம் ஏதும் கிடையாதெனினும் பயன்படுத்துவதில் தவறில்லை. முழு பக்கத்தையும் வாசிக்க: http://www.gnu.org/licenses/gpl-howto.ta.html -- ஆமாச்சு _______________________________________________ ILUGC Mailing List: http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
