On 04/27/2012 05:33 PM, Sivasubramanian M wrote:
http://www.youtube.com/watch?v=MpprDIrgBbw யு டியுப் வீடியோவில் காண்பது
போல யாராவது தமிழில் மெனு போன்ற அங்கங்களை மாற்றி அமைத்து அதன் இமேஜ்
பதிப்பித்திருகிறார்கள ? அப்படி ஒரு இமேஜ் இருந்தால் அது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும்.
இத்தைய முயற்சிகளையே நாம் முன்னர் மேற்கொண்டு வந்தோம்.
நாம் உபுண்டுவிற்கென்று மொழிபெயர்க்காது நேரடியாக பணிகளின் மேலிடத்தே மொழிபெயர்ப்பதை
செய்கிறோம்/ ஊக்குவிக்க விரும்புகிறோம்.
குநோம், கேடிஇ, ஓபன்ஆபீஸ், பயர்பாக்ஸ் என்று மேலிடத்தில் செய்து விட்டால் அது
உபுண்டுவிற்கும் கிடைக்கப்பெறும். உபுண்டுவுடைய மென்பொருள்களை மட்டும் ரொஸட்டா கொண்டு
மொழிபெயர்த்தால் போதும்.
இத்தகைய மொழிபெயர்ப்புகளின் விளைவே நீங்கள் குறிப்பிட்ட வீடியோ போன்றவற்றிலும்
பிரதிபலிக்கின்றது.
ஆயினும் இது தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டிய மலைப்பான பணி. இதனையும் நாளைய கூட்டத்தில்
எடுத்துக் கொள்ளலாம்.
--
ஆமாச்சு
--
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at:
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam