வணக்கம்,

முன்னர் MIT வளாகத்தில் உள்ள AU-KBC ஆராய்ச்சி மையத்தில் மாதந்தோறும் கட்டற்ற 
மென்பொருள்
பற்றிய கூட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வந்ததை இங்குள்ள பலரும் அறிவீர்கள்.

அதனை மறுபடியும் தொடங்குகிறேன். வரும் மார்ச் மாதம் தொடங்கி முதல் சனிக்கிழமைகளில் 
இது
நடைபெறும். கூடுமானவரையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், அதற்காக செய்ய வேண்டியன,
செய்யப்பட்டவை என்ன, யாரால் என்ன செய்ய முடியும் போன்ற அலகுகளினடிப்படையில் 
இந்நிகழ்வுகள்
இனி அமையும்.

வரும் 03-03-2012 அன்று மதியம் மூன்று மணி தொடங்கி 5 மணி வரை  நடைபெறும்.
யாவர்க்குமான மென்பொருள் அறக்கட்டளையினால் இந்நிகழ்வு வருங்காலங்களில் 
முன்னெடுத்துச்
செல்லப்படும்.

இடம்: ஆமாச்சு இன்பிராசாப்ட் சர்வீஸஸ், F2 பிளாக் A, சூரஜ் நிவாஸ், 16/17 ஸ்டேஷன் 
பார்டர்
ரோடு, குரோம்பேட்டை, சென்னை - 600044.  நிகழ்வின் நிரலை விக்கியில் இட்டு பகிர்ந்து
கொள்கிறேன்.

விரிவான விவரங்களை விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்.

--

ம. ஸ்ரீ ராமதாஸ்



--
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க