On Mon, 2011-03-07 at 21:42 -0800, கா. சேது | K. Sethu wrote: > > அவருக்கு முனையம் வழியாக ஆணைகள் உள்ளிட பட்டறிவு இல்லாதலால் தாங்களாவது > அல்லது சென்னையில் உள்ள வேறு நண்பர் யாரவது அவருடன் தொடர்பு கொண்டு > அவருக்கு உதவும் படி கேட்டுகொள்கிறேன். > > அவரது நண்பர் > சுட்டியுள்ள > http://www.ubuntugeek.com/how-to-restore-grub-boot-loader-after-installing-windows.html// > தளத்தில் உள்ளவாறு நிகழ்வட்டு இயக்கத்தில் mount செய்ய வேண்டிய வகிர்வுகளைக் > (root வகிர்வு மற்றும் boot தனி வகிர்வானால் அதையும்) கண்டறிந்து mount செய்து > முதலில் MBR க்கு GRUB-2 ஐ நிறுவி பின் அக் கையேட்டில் குறிப்பிட்டவாறு மேலதிக > mount களைச் செய்து chroot செய்து update-grub ஆணை கொடுப்பதன் வழியாக grub.cfg > மேம்படும். (கடைசியாகத்தான் Windows 7 நிறுவி உள்ளதால் இந்த chroot சூழலில் > update-grub செய்கை இன்றியமையாதது ).
மடிக்கணினி வைத்திருந்தால் எடுத்துக் கொண்டு நாள் பொழுதில் எங்கள் அலுவலகத்திற்கு வருமாறு தெரிவிக்கவும். உதவ நண்பர்கள் இருக்கிறார்கள். > ஆமாச்சு, லினக்சுகளில் முனையம் வழியாக ஆணைகள் இட்டு அமைவடிவாக்கங்கள் > ஆக்கல், திருத்தல் போன்ற பணிகளை புதுப் பயனர்கள் கற்று தன்னம்பிக்கையுடன் > செயலாக்க கையேடுகள், வழிகாட்டிகள் ஆக்கப்பட வேண்டும். அல்லது இத்தகைய > இடர்களுக்கு முகம் கொடுப்போருக்கு விண்டோவிலே இலகுவான வரைகலை இடைமுகப்பு > வழியாக மாற்றங்கள் செய்யக்கூடிய பயன்பாடுகளை உருவாக்க வேண்டும். இவையெல்லாம் நினைவில் உள்ளன. இத்தகைய பணிகளிலிருந்து தற்போது எடுத்துக்கொண்டுள்ள ஓய்வு இன்னும் சில வார காலம் தொடரும். பின்னர் மறுபடியும் இணைந்து மேற்கொள்வதற்கான பணிகளை மேற்கொள்வேன். நன்றி. -- -- ம. ஸ்ரீ ராமதாஸ், எண்ணங்கள் செய்கைக ளெல்லாம் - இங்கு யாவர்க்கும் ஒன்றெனல் காணீர் -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam