Re: [உபுண்டு பயனர்][MinTamil] Re: உபுண்டு - விண்டோஸ் 7 பிரச்சனை

2011-03-07 திரி கா . சேது | K . Sethu

நண்பர் ஆமாச்சு மற்றும் சென்னையிலுள்ள உபுண்டு பயனர் - உபுண்டு தமிழ் குழும 
உறுப்பினர்களுக்கு,

நண்பர் சே. பார்த்தசாரதியின் வேண்டுகோளை இவ்விழையில் வாசிக்கவும். மின்தமிழ் 
இழை :  https://groups.google.com/forum/?pli=1#!topic/mintamil/or9YdLP_siQ

அவருக்கு முனையம் வழியாக ஆணைகள் உள்ளிட பட்டறிவு இல்லாதலால் தாங்களாவது அல்லது 
சென்னையில் உள்ள வேறு நண்பர் யாரவது அவருடன் தொடர்பு கொண்டு அவருக்கு உதவும் 
படி கேட்டுகொள்கிறேன்.

அவரது நண்பர் சுட்டியுள்ள 
http://www.ubuntugeek.com/how-to-restore-grub-boot-loader-after-installing-windows.html//
  
தளத்தில் உள்ளவாறு நிகழ்வட்டு இயக்கத்தில் mount செய்ய  வேண்டிய வகிர்வுகளைக் 
(root வகிர்வு மற்றும் boot தனி வகிர்வானால் அதையும்) கண்டறிந்து mount செய்து 
முதலில் MBR க்கு GRUB-2 ஐ நிறுவி பின் அக் கையேட்டில் குறிப்பிட்டவாறு மேலதிக 
mount களைச் செய்து chroot செய்து update-grub ஆணை கொடுப்பதன் வழியாக grub.cfg 
மேம்படும். (கடைசியாகத்தான் Windows 7 நிறுவி உள்ளதால் இந்த  chroot சூழலில் 
update-grub செய்கை இன்றியமையாதது ). 

ஆமாச்சு, லினக்சுகளில் முனையம் வழியாக ஆணைகள் இட்டு அமைவடிவாக்கங்கள் ஆக்கல், 
திருத்தல் போன்ற பணிகளை புதுப் பயனர்கள் கற்று தன்னம்பிக்கையுடன் செயலாக்க 
கையேடுகள், வழிகாட்டிகள் ஆக்கப்பட வேண்டும். அல்லது இத்தகைய இடர்களுக்கு முகம் 
கொடுப்போருக்கு விண்டோவிலே இலகுவான வரைகலை இடைமுகப்பு வழியாக மாற்றங்கள் 
செய்யக்கூடிய பயன்பாடுகளை உருவாக்க வேண்டும்.

கா. சேது
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam


Re: [உபுண்டு பயனர்][MinTamil] Re: உபுண்டு - விண்டோஸ் 7 பிரச்சனை

2011-03-07 திரி Vignesh Nandha Kumar
வணக்கம்,

2011/3/8 கா. சேது | K. Sethu 

>
> ஆமாச்சு, லினக்சுகளில் முனையம் வழியாக ஆணைகள் இட்டு அமைவடிவாக்கங்கள் ஆக்கல்,
> திருத்தல் போன்ற பணிகளை புதுப் பயனர்கள் கற்று தன்னம்பிக்கையுடன் செயலாக்க
> கையேடுகள், வழிகாட்டிகள் ஆக்கப்பட வேண்டும். அல்லது இத்தகைய இடர்களுக்கு முகம்
> கொடுப்போருக்கு விண்டோவிலே இலகுவான வரைகலை இடைமுகப்பு வழியாக மாற்றங்கள்
> செய்யக்கூடிய பயன்பாடுகளை உருவாக்க வேண்டும்.
>

இத்தகைய மென்பொருட்கள் ஏற்கனவே சில இருப்பதாக அறிகிறேன்.

* StartUp-Manager - உபுண்டு repo-விலேயே உள்ளது.
* GrubConf - http://grubconf.sourceforge.net/
* QGRUBEditor -
http://qt-apps.org/content/show.php/QGRUBEditor?content=60391

எனினும் இவற்றை நான் பயன்படுத்தியதில்லை. பயன்படுத்திய அனுபவம் உள்ளவர்கள்
இதுபற்றி மேலும் விளக்கலாம்.

-- 
நன்றிகளுடன்,
விக்னேஷ்.
http://krvignesh.wordpress.com
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam