வணக்கம்

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கட்டற்ற தமிழ்க் கணிமை கூட்டத்தின் மணித்துளிகள்:

அருண் பெடொரா இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வேறு வடிவங்களை எவ்வாறு
உருவாக்குவது என்பதைப் பற்றி விளக்கினார். அதற்காக அவர் தயார் செய்த அளிக்கை
http://bit.ly/bskIcs முகவரியில் கிடைக்கப்பெறுகிறது. மேலும் தமிழ் இணைய
மாநாட்டிற்காக அவர் தயாரித்த இமேஜ்
http://psgkriya.org/saga/Tamilan-Fedora-Remix/Tamilan.iso முகவரியில்
கிடைக்கிறது. இதன் சிறப்பம்சங்களாக பெடோரா தமிழ் விருப்பக் குழுவின் மடலாடற்
குழுவில் அருண் பகிர்ந்து கொண்டவை:

1. KDE 4.4.4 2. Multimedia stuff 3. VLC 4.
Firefox,Pidgin,Transmission,Tucan,Pitivi, Miro 5. Flash support 6. Tamil
support ( KDE tamil support which is not available in repositories) 7.
GNU/Linux philosophy/Advocacy videos 8. All updates as of June 20

இதனை உண்டாக்குவதற்கான கிக் ஸ்டார்ட் கோப்புகள்:

Base: http://sagarun.fedorapeople.org/misc/fedora-live-base.ks Tamilan ks:
http://sagarun.fedorapeople.org/misc/tamilan.ks

தொடர்ந்து குனு உரிமங்கள் தமிழாக்கம் குறித்து ஆமாச்சு விளக்கினார்.
பங்களிக்க விருப்பமுள்ளோர் http://kanimozhi.info/குனு_உரிமங்கள்_தமிழாக்கம்
பக்கத்தின் துணையினை நாடலாம்.

ஜூன் 23 தொடங்கவிருக்கும் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக
நடைபெறவிருக்கும் தமிழ் இணைய மாநாடு 2010 இல் கட்டற்ற மென்பொருள் தொடர்பாக
விளக்கமளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் இணையப் பயிலரங்கு எனும்
தலைப்பில் நடைபெறவிருக்கிற ஸ்டாலில் கலந்து கொண்டு வருவோர்க்கு கட்டற்ற
மென்பொருள்கள் இயங்குதளங்கள் அதில் தமிழ் வசதிகள் செய்து கொள்வது
பற்றியெல்லாம் விளக்கப்படும். விரிவான விவரங்கள்
http://kanimozhi.info/தமிழ்_இணைய_மாநாடு_2010 பக்கத்தில் கிடைக்கிறது.

இதன் ஒரு பகுதியாக கண்காட்சிக்கு வருவோருக்கு விநியோகிக்க "கட்டற்ற
மென்பொருள் ஏன்? எப்படி? எதற்கு?" என்ற தலைப்பில் கேள்வி பதில்கள் அடங்கிய
நோட்டீசு அச்சடிக்கப்பட்டுள்ளது. இதனை தாங்களும்
http://amachu.net/files/foss/download/free-software-notice/ இடத்திலிருந்து
இறக்கி கட்டற்ற மென்பொருளை பறைசாற்ற பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதனை தொகுத்தவர்: விக்னேஷ் நந்தகுமார். வடிவமைப்பு: செந்தில்ராஜா

வரும் ஆகஸ்டு மாதம் மூன்றாம் சனிக்கிழமை கட்டற்ற கணிமை தொடர்பான ஒருநாள்
கருத்தரங்கம் ஒன்றை நடத்தலாம் என்று முடிவு மேற்கொள்ளப்பட்டது.

இதன் நோக்கம்:

இனங்காணப்பட்ட கட்டற்ற கணிமை தொடர்பான தலைப்புகளில் பங்களிக்க
விருப்பமுள்ளோரை ஒன்று கூட்டி ஆக்கபூர்வமான விவாதத்திற்கு வித்திட்டு,
அத்தலைப்புகளில் மென்பொருள் உருவாக்கத்திற்கு/ பங்களிப்புகளுக்கு வழிவகை செய்ய
வேண்டியது.

கூட்டத்தின் போது முன்மொழியப்பட்ட தலைப்புகள்:

1) கட்டற்ற இயங்குதளங்களில் பன்மொழிக் கையாள்கை - அடிப்படை

2) விசைப்பலகைகளும் - உள்ளீட்டு முறைகளும்

3) தமிழ் மின்னெழுத்துக்கள்

4) எழுத்துப் பிழை திருத்தி

5) இயங்குதளத்தோடு ஒன்றிய தமிழ் நாட்காட்டி

6) எழுத்துணரி

7) உரை-ஒலி & ஒலி உரை மாற்றி

8) பயன்பாடுகள் உருவாக்கம் - தமிழ் pdf to text, சொற் பதம் பிரித்தல்,
மின்னெழுத்து மாற்றி, பிற மொழி எழுத்துப்பெயர்த்தல், விளையாட்டுக்கள்

9) கட்டற்ற தமிழ் கார்பஸ்

10) மொழிபெயர்ப்பும் ஆவணமாக்கமும்

11) இணைய வழி தமிழ் பயன்பாடுகள்

12) மேற்கண்டவற்றை முறையாக கட்டற்ற இயங்குதளங்களின் வாயிலாக வழங்குதல் -
டெபியன் பெடோரா

13) மொபைல் கருவிகளும் மொழிகளும்

தாங்கள் விரும்பும் தலைப்பையும் முன்மொழியலாம்.

இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்று பணிகள் மேற்கொள்ளப்பட, இவற்றை ஒருங்கிணைக்க
நிறைய பேர் தேவை. நீங்களும் அவர்களுள் ஒருவராக இருப்பீர்களென்றால் amachu at
amachu dot net என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள தலைப்புகளில் தங்களுக்கு முன் அனுபவம் இருந்து
அவ்வமர்வுகளுக்கு பொறுப்பேற்க விரும்புவோரும் வேண்டும். அப்படிப்பட்டவராக
தாங்கள் இருந்தாலும் amachu at amachu dot net என்ற முகவரியில் தொடர்பு
கொள்ளவும். இச்செய்தியை பறைசாற்றி உதவவும். 

--

ஆமாச்சு

_______________________________________________
ILUGC Mailing List:
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to