தியாகராசா பொறியியல் கல்லூரி, மதுரையில் கட்டற்ற மென்பொருள்கள் திருவிழா 2009 கடந்த பிப்ரவரி 27 முதல் மார்ச் 1 வரை நடைபெற்றது. இவ்விழாவில் பல இடங்களிலிருந்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். உபுண்டு தமிழ் குழுமம் சார்பில் திரு. பத்மநாதன் மற்றும் திரு. அமாச்சு ஆகியோர் செயல்விளக்கக்கூடம் ( Demo Stall) அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். உபுண்டு தமிழ் குழுமம் பார்வையாளர்களுக்கு தமிழில் லினக்ஸ் நிறுவுதல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை விளக்கி, உபுண்டு குறுவட்டுக்கள் மற்றும் பெடோரா பெருவட்டுக்களை வழங்கினர். திரு. பாரதி அவர்கள் 'கட்டற்ற மென்பொருள்கள்' என்ற தமிழ் நூலின் சாராம்சத்தை பார்வையாளர்களுக்கு விளக்கினார். லினக்ஸ் பாஸ்கர் பார்வையாளர்களுக்கு பெடோராவில் தமிழ் மொழிசார்பை தனது கணினியின் மூலம் செயல்விளக்கம் அளித்தார்.
இவ்விழாவில் செயல்விளக்கக்கூடம் அமைத்துத்தந்த திருவிழா அமைப்பாளர்களுக்கும், தியாகராசா பொறியியல் கல்லூரிக்கும் மனமார்ந்த நன்றி! விழாவில் கவர்ந்தது: 1. டி.வி.எஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ, மாணவியர் செயல்விளக்கத்தில் கல்லூரி மாணவ, மாணவியரைவிட சிறப்பாக விளங்கினர். 2. சென்னை லினக்ஸ் பயனாளர் குழு இவ்விழாவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சன்மானங்களை வழங்கினர். 3. தானியங்கி தமிழ் வார்த்தை சொதனை பொதி ( Tamil Spell Checker), ஒரே கணினியின் மைய செயலகம் மூலம் பல இருக்கைகளில் லினக்ஸ் (Multi seat Linux using single CPU) போன்ற திட்டவெளிப்பாடுகள் ( Project Presentations) பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. பத்மநாதன் -- Padhu, Pollachi. Knowledge is power ! "Be an Energy (Opti)mizer - Use Electricity Wiser"
_______________________________________________ To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with "unsubscribe <password> <address>" in the subject or body of the message. http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc