வணக்கம்,

மொழிபெயர்ப்பு போன்ற காரியங்களெல்லாம் முக்கியம் எனும் அதே வேளையில் சற்றே
தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய காரியங்களை கருத்தில் நிறுத்துகிற போது ஆற்றல்
வாய்ந்த, முன்வந்து நேரம் கொடுக்கக் கூடிய நிரலாளர்கள் நாம் மேற்கொண்டுள்ள
பணிகளுக்குத் தேவைப்படுகின்றனர்.

எழுத்துப் பிழை திருத்தி, உரை-ஒலி மாற்றம் போன்ற பல பணிகள் மேற்கொள்ளப் பட
வேண்டியுள்ளன. இத்திட்டங்களை கட்டற்று செயற்படுத்த தேவையான நிதி வளங்களை
ஆராய்ந்து அதற்குண்டான பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தங்களுள் அத்தகையோர் இருந்து பங்களிக்க இயலுமாயின் தெரியப்படுத்துமாறு கேட்டுக்
கொள்கிறேன். தாங்கள் எந் நிரலாக்க மொழியில் சிறந்து விளங்குகிறீர்கள்,
எவ்வகைகளில் பங்களிக்க இயலும் போன்ற விவரங்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு
கேட்டுக் கொள்கிறேன்.

-- 
ஆமாச்சு
_______________________________________________
To unsubscribe, email [EMAIL PROTECTED] with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to